உலகக்கிண்ண 20-20 தொடரில் இன்று (3/11/2021) முதல் போட்டியாக நியூ சிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி முதற் போட்டியாக நடைபெற்றது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது. இதில் மார்ட்டின் கப்டில் 93(56) ஓட்டங்களையும், கிளென் பிலிப்ஸ் 33(37) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பிராட் வீல், சப்யான் ஷாரிப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். பதிலுக்கு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றது. இதில் மிச்செல் லீஸ்க் ஆட்டமிழக்காமல் 42(20) ஓட்டங்களையும், மத்தியூவ் குரொஸ் 27(29) ஓட்டங்களையும், ஜோர்ஜ் மன்சி 22(18) ஓட்டங்களையும், ரிச்சி பெரிங்டொன் 20(17) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஐஷ் சொதி, ட்ரெண்ட் பொவ்ல்ட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். இந்த போட்டியின் நாயகனாக மார்ட்டின் கப்டில் தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாம் போட்டியாக ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலன போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்களை பெற்றது. இதில் ரோஹித் ஷர்மா 74(47) ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 69(48) ஓட்டங்களையும், ஹார்டிக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 35(13) ஓட்டங்களையும், ரிஷாப் பான்ட் ஆட்டமிழக்காமல் 27(13) ஓட்டங்களையும் பெற்றனர். இந்த உலகக்கிண்ண 20-20 தொடரின் அதிகூடுதலான ஓட்டங்களை இந்தியா அணி பெற்றுள்ளது.
பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றது. இதில் கரீம் ஜனட் 42(22)ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும், மொஹமட் நபி 35(32) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹமட் ஷமி 3 விக்கெட்களையும் நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாடிய ரவிச்சந்திரன் அஷ்வின் 2 விக்கெட்களையும், கைப்பற்றினர்.
இந்தியா அணி மூன்றாவது போட்டியில் விளையாடி முதல் வெற்றியினை பெற்றுள்ளது. அதிரடியாக அடித்தாடி வெற்றி பெற்றாலும் இந்தியா அணி அரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது சந்தேகமான நிலையிலேயே உள்ளது. நியூசிலாந்து அணி இனி விளையாடப்போகும் போட்டிகளில் ஒன்றிலாவது தோல்வியடைந்து, இந்தியா இனி விளையாடவுள்ள சகல போட்டிகளிலும் வெற்றி பெற்றாலே அரை இறுதி வாய்ப்பு கிடைக்கும்.
நாளைய தினம் முதற் போட்டியாக பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டியாக இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.
