தலங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துரிகிரியவிலுள்ள லடியா கும்பலை சேர்ந்த 23 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், சிங்கப்பூருக்கு தப்பிச் செல்வதற்காக பண்டார்நாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தபோது அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொலிஸார் வருவதற்கு முன் குற்றவாளி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனையடுத்து இவர் குறித்த தகவல்கள் சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அதிகாரிகளால் அவர் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியதும், குறித்த நபரை கைது செய்த பொலிஸார் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.