கோழி இறைச்சி விலையில் மாற்றம்!

கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் வர்த்தகர்களுடனான இறுதிக் கலந்துரையாடல் எதிர்வரும் 04ம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நாளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சி கிலோ ஒன்றினை 850 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியுமெனவும், எனினும் வர்த்தகர்கள் மக்களுக்கு இந்த விலையில் வழங்குவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கோழிப்பண்ணை மற்றும் முட்டை உற்பத்தி நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்ட தொகையினை மீளாய்வு செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர சுகாதார மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனிடையே, கோழி இறைச்சி கிலோ ஒன்றினை 1,250 ரூபாவிற்கு இன்று(02.09) முதல் விற்பனை செய்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைப்பதற்கு கடந்த வாரமே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply