சிங்கப்பூரின் ஒன்பதாவது ஜனாதிபதியதாக இந்திய வம்சாவளி தமிழன் தர்மன் சண்முகரட்ணம் வெற்றி பெற்றுள்ளார். 70.4 சதவீத வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுளளதாக சிங்கப்பூர் தேர்தல் திணைக்களம் இன்று(09.02) அறிவித்துள்ளது.
இவர் சிங்கப்பூரின் உப ஜனாதியாக ஏற்கனவே கடமையாற்றியுள்ளார். அத்தோடு நீண்ட காலமாக சிங்கப்பூர் நாணய நிதியத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
66 வயது நிரம்பிய பொருளியல் நிபுணரான இவர், தான் வகித்த சகல அரச பதவிகளிலிருந்தும் விலகி இந்த தேர்தலில் போட்டியிட்டு சீன வம்சாவளி தொடர்புகள் அற்ற, முதலாவது ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளார்.
“அனைவருக்கும் மதிப்பு” எனும் வாசகத்துடன் தேர்தலில் போட்டியிட்ட இவர், தனக்கு கிடைத்த வாக்குகள் சிங்கப்பூரின் நம்பிக்கைக்கான வாக்கு என தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியான மக்களின் செயல் கட்சி சார்பில் போட்டியிட்டே இவர் பெற்றுள்ளார். சிங்கப்பூரில் பொருளாதரா சிக்கல் நிலவும் நிலையில் இந்த வெற்றி ஆளும் கட்சிக்கு வலு சேர்ப்பதாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஜனாதிபதி அதிகாரங்கள் அற்ற சம்பிரதாயபூர்வ ஜனாதிபதியாக செயற்படுவார்.
2017 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஹலீமா யாகூப் இன் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையிலேயே இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.
நாதன் சண்முகரட்ணம் இந்திய வம்சாவளி தமிழர். இவரது தகப்பன் சிங்கப்பூரின் “நோயியல் தந்தை” என அழைக்கப்படும் மருத்துவவியல் விஞ்ஞானியவர். மனைவி சீன-ஜப்பன் இணைந்த தம்பதியரின் மகளான வழக்கறிஞர்.