ஆசியக் கிண்ணத்தில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று (03.09) லாகூரில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணி சிறந்த துடுப்பாட்டம் ,மற்றும் இறுக்கமான பந்துவீச்சு மூலம் ஆப்கானிஸ்தான் அணியை 89 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் இரண்டாம் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

இரு அணிகளுக்குமான போட்டியில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்று வாய்ப்பு எனும் நிலையிலே பங்களாதேஷ் அணி விளையாடியது. நாளை நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கை அணியை மிகப் பெரிய வெற்றி ஒன்றை பெறுவதன் மூலமே தமக்கான வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும். இலங்கை அணி சிறிய தோல்வியை அடைந்தாலும் இரண்டாம் சுற்று வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும். இலங்கை அணிக்கான அதிகமான இரண்டாம் சுற்று வாய்ப்பு காணப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அணியின் இரண்டாம் சுற்று வாய்ப்பே கேள்விக்குறியாக மாறியுள்ளது.

பங்களாதேஷ் அணியின் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. அதன் பின்னர் மொஹமட் நைம் ஆட்டமிழக்க அடுத்த விக்கெட்டும் விரைவாக வீழ்த்தப்பட்டது. மெஹிடி ஹசன் மிராஸ் மற்றும் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஆகியோர் 194 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து பங்களாதேஷ் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை வெற்றி ஓட்ட எண்ணிக்கையாக மாற்றினார்கள்.

மெஹிடி ஹசான் மிராஸ் காயம் காரணமாக துடுப்பாட முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார். அதனை தொடர்ந்து சதமடித்த நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ சிறிது நேரத்தில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இரு விக்கெட்டுகள் வேகமாக வீழ்த்தப்பட்டன. ஷகிப் அல் ஹசன், முஸ்பிகியூர் ரஹீம் ஆகியோர் இறுதியில் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்திக் கொடுத்தனர்.

பங்களாதேஷ் அணி இதில் 50 ஓவர்களில் 05 விக்கெட் இழப்பிற்கு 334 ஓட்டங்கள் என்ற இலக்கை ஆப்கானிஸ்தான் அணிக்கு நிர்ணயித்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரஹ்மனுள்ள குர்பாஸ் வேகமாக ஆட்டமிழந்தார். இது ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவை வழங்கியது. இப்ராஹிம் ஷர்டான் ரஹ்மத் ஷா மற்றும், ஹஸ்மதுல்லா ஷஹிதி ஆகியோருடன் இணைந்து நல்ல இணைப்பாடங்களை உருவாக்கி அணியினை பலமான நிலைக்கு எடுத்து சென்றார். இருப்பினும் அவர் ஆட்டமிழக்க செய்யப்பட வெற்றி வாய்ப்பு பங்காளதேஷ் அணி பக்கமாக சென்றது.

பங்களாதேஷ் அணி சார்பாக டஸ்கின் அஹமட் 4 விக்கெட்களை கைப்பற்றி வெற்றிக்கு கைகொடுத்தார். ஷொரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்களை கைப்பற்றிக் கொண்டார்.

இன்று(04.09) இந்தியா, நேபாளம் அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரஹ்மனுல்லா குர்பாஸ்L.B.Wஷொரிபுல் இஸ்லாம்010700
இப்ராஹிம் சட்ரன்பிடி – முஷ்பிகுர் ரஹீம்ஹசான் மஹ்முட்7574101
ரஹ்மத் ஷாBoweldதஸ்கின் அஹமட்335750
ஹஷ்மதுல்லா ஷஹீதிபிடி – ஹசான் மஹ்முட்ஷொரிபுல் இஸ்லாம்516060
நஜிபுல்லா சட்ரன்Boweldமெஹிடி ஹசான் மிராஸ்172520
மொஹமட் நபிபிடி – அபிப் ஹொசைன்தஸ்கின் அஹமட்030600
குல்படின் நைப்Boweldஷொரிபுல் இஸ்லாம்151311
கரீம் ஜனட்Run Outதஸ்கின் அஹமட்010500
ரஷீத் கான்பிடி – ஷகிப் அல் ஹசன்தஸ்கின் அஹமட்241531
முஜீப் உர் ரஹ்மான்Hit Wicketதஸ்கின் அஹமட்040800
பசல்ஹக் பரூகி  010100
உதிரிகள்  20   
ஓவர்  44.3விக்கெட்  10மொத்தம்245   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
தஸ்கின் அஹமட்8.3004403
ஷொரிபுல் இஸ்லாம்09013603
ஹசான் மஹ்முட்09016101
ஷகிப் அல் ஹசன்08004400
அபிப் ஹொசைன்01000600
மெஹிடி ஹசான் மிராஸ்08004101
ஷமீம் ஹொசைன்01001000
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
மொஹமட் நைம்Boweldமுஜீப் உர் ரஹ்மான்283250
மெஹிடி ஹசான் மிராஸ்Retierd hurt 11211973
தௌஹித் ரிதோய்பிடி – ஹஷ்மதுல்லா ஷஹீதிகுல்படின் நைப்000200
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோRun out 10410592
முஷ்பிகுர் ரஹீம்Run Out 251511
ஷகிப் அல் ஹசான்     
ஷமீம் ஹொசைன்Run out 110601
அபிப் ஹொசைன்  040300
       
       
       
உதிரிகள்      
ஓவர்  50விக்கெட்  05மொத்தம்334   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
பசல்ஹக் பரூகி06015300
முஜீப் உர் ரஹ்மான்10006201
குல்படின் நைப்08005801
கரீம் ஜனட்0600  3900
மொஹமட் நபி10005000
ரஷீத் கான்10016600

புள்ளிப்பட்டியல்

குழு A

அணிவி.போவெற்றிதோல்விசமம்கை.வி.போபுள்ளிகள்ஓ.ச.வே
பாகிஸ்தான்0201000001034.760
இந்தியா0100000001010.000
நேபாளம்010001000000-4.760

குழு B

அணிவி.போவெற்றிதோல்விசமம்கை.வி.போபுள்ளிகள்ஓ.ச.வே
இலங்கை0101000000020.951
பங்களாதேஷ்0201010000020.373
ஆப்கானிஸ்தான்010001000000-1.780

Social Share

Leave a Reply