மலேசிய அதிகாரிகளை ஏமாற்றிய யாழ் இளைஞன்!

போலி ஆவணங்களை சமர்ப்பித்து மலேசிய அதிகாரிகளை ஏமாற்றி அந்நாட்டு கடவுச்சீட்டை பெற்று அதனை பயன்படுத்தி ஜோர்தானுக்கு செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (03.09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வேலணை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து மலேசிய கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply