ஈஸ்டர் தாக்குதலுக்கும் ராஜபக்ஷக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு?

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல்களுக்கும், ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை நடத்துவதற்காக ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக திட்டமிடப்பட்டதாகவும், இதனையடுத்தே கடந்த 2019 ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விவகாரம் குறித்த சர்ச்சை காணொலி ஒன்றை நாளை (05.09) வெளியிடவுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செனல்-04 என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.

குறித்த ஊடகமானது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்குற்றங்கள் பற்றிய காணொலிகளை வெளியிட்டு பிரபல்யமானது. இருப்பினும் அந்த நேரத்தில் இலங்கை அரசாங்கம் குறித்த காணொலிகளை மறுத்திருந்தது.

இந்நிலையில் தற்போது ஈஸ்டர் தாக்குதல் குறித்த புதிய ஆதாரத்தை காணொலி ஊடாக வெளியிடவுள்ளதாக கூறியிருப்பது இலங்கை அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply