ஈழத்தில் தயாரிக்கப்பட்ட ”புஷ்பக 27” என்ற திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகிய நிலையில், வெற்றிநடை போடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியா மென்டிசின் திரைக்கதையில், காரை சிவநேசனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழரின் தொன்மையை தேடிச் செல்லும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது யாழில் மாத்திரம் திரையிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் காலங்களில் நாடு முழுவதும் திரையிடப்படும் எனக் கூறப்படுகிறது.