இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

இலங்கை நாடாளுமன்றம் இன்று (05.09) கூடுகிறது.

இதன்போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக நம்பிக்கையில்லா பிரேரணையை வென்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் எதிர்கட்சியினர் செயற்பட்டு வருகின்றனர். அதேபோல் ஆளும் கட்சியினரும் பிரேரணையை தோற்றகடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பான வாதபிரதிவாதங்கள் இன்றைய அமர்வின்போது இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கோ, அல்லது வெளியிடங்களுக்கோ சென்று தங்கக்கூடாது எனவும், கட்டாயம் அவை நடவடிக்கையில் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறபிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை இன்றைய தினம் ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனியார் உறுப்பினர் சட்டமூலம் உள்ளிட்ட மேலும் சில சட்டமூலங்கள் குறித்த இரண்டாம் வாசிப்பு இடம்பெறவுள்ளது.

Social Share

Leave a Reply