இலங்கைக்கும் – அபுதாபிக்கும் இடையில் புதிய விமான சேவை!

இலங்கையையும் – அபுதாபியையும் இணைக்கும் வகையில் புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பது குறித்து ஏர் அரேபியா அபுதாபி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விமான சேவை 2024 ஜனவரி 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பண்டார்நாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அபுதாபி விமான நிலையத்திற்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குறித்த விமான சேவை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஏர் அரேபியாவின் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அடெல் அல் அலி,  அபுதாபியிலிருந்து நேரடி விமானங்கள் மூலம் கொழும்பை எங்களின் வளர்ந்து வரும் வலையமைப்பில் சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

ஏர் அரேபியா அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பயண மற்றும் சுற்றுலாத் தொழில்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே வேளையில், பல இடங்களுடனான தலைநகரின் இணைப்பை மேலும் வலுப்படுத்த உதவும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்தப் புதிய வழித்தடத்தில் விமானங்களை முன்பதிவு செய்ய, வாடிக்கையாளர்கள் ஏர் அரேபியாவின் இணையதளத்தைப் பார்வையிடலாம் எனவும் கால் சென்டரைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply