பையில் மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம்

இன்று சப்புகஸ்கந்தையில் பெண் ஒருவரின் சடலம் குப்பை கூளங்களுக்குள் பை ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. சந்தேகத்துக்கிடமான பயணத்துக்கு பாவிக்கும் பை ஒன்று காணப்படுவதாக பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டது. சடலம் கை , கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

சடலம் வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில் பொலிசார் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். 35 தொடக்கம் 40 வயதுக்குடுபட்ட பெண் ஒருவரின் சடலமாக இருக்கலாம் எனவும், குறித்த பெண் கொலை செய்யப்பட்டு 5 நாட்களாவது இருக்குமெனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனைக்காக இறந்த பெண்ணின் உடல் ராகம போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளள்து.

இதே போன்ற கொலை சம்பவம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

பையில் மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம்

Social Share

Leave a Reply