பாகிஸ்தான் லாகூரில் இன்று(05.09) நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி இரண்டு ஓட்டங்களினால் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
இந்த வெற்றி இலங்கை அணியின் தொடர்ச்சியான பன்னிரண்டாவது வெற்றியாகும். அவுஸ்திரேலியா அணி 21 தொடர்ச்சியான வெற்றிகளையும், தென்னாபிரிக்கா அணி 12 தொடர்ச்சியான வெற்றிகளையும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பெற்றுள்ளன.
292 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை 37.1 ஓவர்களில் வெற்றி பெற்றால் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற முடியுமென்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாடியது. அதனை குறி வைத்து ஆரம்பம் முதல் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி அதனை பெறுவது சாத்தியம் என்ற நிலையை உருவாக்கியது. இறுதி வரை அதற்காக போராடியது. இந்த போராட்டத்தை ஒரு அசாதரண போராட்டமாக கூறலாம்.
ஆரம்ப விக்கெட்கள் இரண்டையும் கஸூன் ரஜித தகர்த்துக் கொடுக்க இலங்கை அணி வெற்றி பெறுவது உறுதி என்ற நிலை உருவானது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்கள் வீழ்ந்தாலும் தமது குறிக்கோளை விடவில்லை. மொஹமட் நபி அதிரடி நிகழ்த்தி 24 பந்துகளில் அரைச்சதம் அடித்து வேகமான அரைச்சதம் என்ற ஆப்கானிஸ்தான் சாதனையை நிலைநாட்டினர். குலாஃப்டின், ரஹ்மத் ஷா ஜோடி 71 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். அதன் பின்னர் அணியின் தலைவர் ஹஸ்மதுல்லா ஷஹிடி, மொஹமட் நபி ஜோடி 47 பந்துகளில் 80 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். நபி ஆட்டமிழந்த பின்னர் வேகம் குறைந்தது. அவரை மஹீஸ் தீக்ஷண ஆட்டமிழக்க செய்தார்.
தோற்றாலும் பரவாயில்லை, ஆப்கானிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகாமல் தடுக்க வேண்டும் என்ற நிலை இலங்கை அணிக்கு உருவானது. நபி ஆட்டமிழந்ததனை தொடர்ந்து களமிறங்கிய கரீம் ஜனட் அதிரடியாக அடித்தாடி இலக்கை இலகுவாக்கினார். வெல்லாளகே அவரை ஆட்டமிழக்க செய்தார். அதே ஓவரில் அணியின் தலைவரையும் ஆட்டமிழக்க செய்ய இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு உருவானது.
7 விக்கெட்களை இழந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் போராட்டம் தொடர்ந்தது. ரஷீட் கான் இறுதி நேரத்தில் போராடினர். வெல்லாளகேயின் ஒரு ஓவரில் 12 ஓட்டங்களை பெற 1 பந்தில் 3 ஓட்டங்களை பெற்றால் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாம் சுற்று சுற்றுக்கு தகுதி பெறுமென்ற என்ற நிலையில் தனஞ்சய டி சில்வா பந்துவீசி விக்கெட்டினை கைப்பற்ற அடுத்த மூன்று பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் தனஞ்சய இறுதி விக்கெட்டை கைப்பற்ற இலங்கை அணி 02 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
கஸூன் ரஜித நான்கு விக்கெட்களை கைப்பற்றினார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. இருப்பினும் அது முறியடிக்கப்பட இருவருமே அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டிமுத், பத்தும் 63 ஓட்டங்களை பகிர்ந்தனர். அதன் பின்னர் சரித் அசலங்க, குஷல் மென்டிஸ் ஜோடி 102 ஓட்டங்களை பகிர்ந்து இலங்கை அணிக்கு பலத்தை வழங்கினர். சரித் ஆட்டமிழக்க மீண்டும் மத்திய வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குஷல் மென்டிஸ் சதம் அடிக்கும் வாய்ப்பே துரதிஷ்ட ரன் அவுட் மூலம் இழந்தார். இன்று அவர் 3000 ஓட்டங்களை கடந்தார்.
அண்மைக்கால குஷல் மென்டிஸ் ஓட்டங்களை பெற தடுமாறியதனை வைத்து பாலர் விமர்சனமும் கேலியும் செய்திருந்தனர். அனைத்தும் பதிலடி வழங்கியுள்ளார். LPL போட்டிகளிலேயே அவர் ஓட்டங்களை பெற தடுமாறினார். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாக ஓட்டங்களை பெற்று வருகின்றனர்.
இலங்கை அணியின் தலைவர் தஸூன் சாணக்கவின் துடுப்பாட்டைமே சிக்கலான நிலையில் காணப்படுகிறது. அவர் நல்ல முறையில் துடுப்பாட வேண்டும். போர்ம் ஆக வேண்டும். மத்திய வரிசை தடுமாறிய நிலையில் ஜோடி சேர்ந்த டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷன ஜோடி 64 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை பலமான நிலைக்கு அழைத்து சென்றனர். இலங்கை அணி 50 ஓவர்களில் 08 விக்கெட்டை இழந்து 291 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
தஸூன் சாணக்கவின் பந்துவீச்சு மாற்றங்கள் சரியான முறையில் அமையாதது இலங்கை அணி மீது இந்த அழுத்தம் ஏற்பட காரணமாகியது. டுனித் வெல்லாளகே மற்றும் தனஞ்ஜய டி சில்வா ஆகியோரது பந்துவீச்சுகள் சரியாக பாவிக்கப்படவில்லை. இறுதியில் அவரது விக்கெட்கள் வெற்றிக்கு கைகொடுத்தன. இறுதியில் பாவித்ததை முதலே பாவித்திருந்தால் போட்டி இலங்கை அணியின் பக்கமாக மாறியிருக்கலாம்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பத்தும் நிஸ்ஸங்க | பிடி – நஜிபுல்லா சட்ரன் | குல்படின் நைப் | 41 | 40 | 6 | 0 |
| டிமுத் கருணாரட்ன | பிடி – மொஹமட் நபி | குல்படின் நைப் | 32 | 35 | 6 | 0 |
| குசல் மென்டிஸ் | Run Out | 92 | 84 | 6 | 3 | |
| சதீர சமரவிக்ரம | பிடி – ரஹ்மனுல்லா குர்பாஸ் | குல்படின் நைப் | 03 | 08 | 0 | 0 |
| சரித் அசலங்க | பிடி – ரஷீத் கான் | ரஷீத் கான் | 36 | 43 | 2 | 1 |
| தனஞ்சய டி சில்வா | Boweld | முஜீப் உர் ரஹ்மான் | 14 | 19 | 1 | 0 |
| தஸூன் ஷானக | Boweld | ரஷீத் கான் | 05 | 08 | 1 | 0 |
| டுனித் வெல்லாளகே | 33 | 39 | 3 | 1 | ||
| மஹீஸ் தீக்ஷண | Boweld | குல்படின் நைப் | 28 | 24 | 2 | 1 |
| உதிரிகள் | 07 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 08 | மொத்தம் | 291 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| பசல்ஹக் பரூகி | 07 | 01 | 52 | 00 |
| முஜீப் உர் ரஹ்மான் | 10 | 00 | 60 | 01 |
| குல்படின் நைப் | 10 | 00 | 54 | 03 |
| மொஹமட் நபி | 10 | 00 | 35 | 00 |
| ரஷீத் கான் | 10 | 00 | 63 | 02 |
| கரீம் ஜனட் | 03 | 00 | 20 | 00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரஹ்மனுல்லா குர்பாஸ் | பிடி – குஷல் மென்டிஸ் | கஸூன் ரஜித | 04 | 08 | 1 | 0 |
| இப்ராஹிம் சட்ரன் | Bowled | கஸூன் ரஜித | 07 | 14 | 1 | 0 |
| குல்படின் நைப் | L.B.W | மதீஷ பத்திரன | 22 | 16 | 4 | 0 |
| ரஹ்மத் ஷா | பிடி – மதீஷ பத்திரன | கஸூன் ரஜித | 45 | 40 | 5 | 1 |
| ஹஷ்மதுல்லா ஷஹீதி | பிடி – கஸூன் ரஜித | டுனித் வெல்லாளகே | 59 | 66 | 3 | 1 |
| மொஹமட் நபி | பிடி – தனஞ்சய டி சில்வா | மஹீஸ் தீக்ஷண | 65 | 32 | 6 | 5 |
| கரீம் ஜனட் | பிடி – டிமுத் கருணாரட்ன | டுனித் வெல்லாளகே | 22 | 13 | 1 | 2 |
| நஜிபுல்லா சட்ரன் | பிடி – டுஸான் ஹேமந்த | கஸூன் ரஜித | 23 | 15 | 1 | 2 |
| ரஷீத் கான் | 27 | 16 | 4 | 1 | ||
| முஜீப் உர் ரஹ்மான் | பிடி – சதீர சமரவிக்ரம | தனஞ்சய டி சில்வா | 00 | 03 | 0 | 0 |
| பசல்ஹக் பரூகி | L.B.W | தனஞ்சய டி சில்வா | 00 | 03 | 0 | 0 |
| உதிரிகள் | 15 | |||||
| ஓவர் 37.4 | விக்கெட் 10 | மொத்தம் | 289 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| கஸூன் ரஜித | 10 | 00 | 79 | 04 |
| மஹீஸ் தீக்ஷண | 10 | 00 | 62 | 01 |
| டுனித் வெல்லாளகே | 04 | 00 | 36 | 02 |
| மதீஷ பத்திரன | 10 | 00 | 63 | 01 |
| தஸூன் சாணக்க | 02 | 00 | 32 | 00 |
| தனஞ்சய டி சில்வா | 1.4 | 00 | 12 | 02 |
அணி விபரம்
1 டிமுத் கருணாரட்ன, 2 பத்தும் நிஸ்ஸங்க, 3 குஷல் மென்டிஸ், 4 தனஞ்சய டி சில்வா, 5 சதீர சமரவிக்ரம, 6 தஸூன் சாணக்க, 7 டுனித் வெல்லாளகே, 8 மஹீஸ் தீக்ஷண, 9 மதீஷ பத்திரனே, 10 கஸூன் ரஜித, 11 சரித் அசலங்க
1 ரஹ்மனுல்லா குர்பாஸ் (வி.கா), 2 இப்ராஹிம் சட்ரன், 3 ரஹ்மத் ஷா, 4 ஹஷ்மதுல்லா ஷஹீதி (தலைவர்), 5 நஜிபுல்லா சட்ரன், 6 மொஹமட் நபி, 7 கரீம் ஜனட், 8 குல்படின் நைப், 9 ரஷீத் கான், 10 முஜீப் உர் ரஹ்மான், 11 பசல்ஹக் பரூகி