தப்பி பிழைத்த இலங்கை

பாகிஸ்தான் லாகூரில் இன்று(05.09) நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி இரண்டு ஓட்டங்களினால் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.

இந்த வெற்றி இலங்கை அணியின் தொடர்ச்சியான பன்னிரண்டாவது வெற்றியாகும். அவுஸ்திரேலியா அணி 21 தொடர்ச்சியான வெற்றிகளையும், தென்னாபிரிக்கா அணி 12 தொடர்ச்சியான வெற்றிகளையும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பெற்றுள்ளன.

292 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை 37.1 ஓவர்களில் வெற்றி பெற்றால் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற முடியுமென்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாடியது. அதனை குறி வைத்து ஆரம்பம் முதல் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி அதனை பெறுவது சாத்தியம் என்ற நிலையை உருவாக்கியது. இறுதி வரை அதற்காக போராடியது. இந்த போராட்டத்தை ஒரு அசாதரண போராட்டமாக கூறலாம்.

ஆரம்ப விக்கெட்கள் இரண்டையும் கஸூன் ரஜித தகர்த்துக் கொடுக்க இலங்கை அணி வெற்றி பெறுவது உறுதி என்ற நிலை உருவானது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்கள் வீழ்ந்தாலும் தமது குறிக்கோளை விடவில்லை. மொஹமட் நபி அதிரடி நிகழ்த்தி 24 பந்துகளில் அரைச்சதம் அடித்து வேகமான அரைச்சதம் என்ற ஆப்கானிஸ்தான் சாதனையை நிலைநாட்டினர். குலாஃப்டின், ரஹ்மத் ஷா ஜோடி 71 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். அதன் பின்னர் அணியின் தலைவர் ஹஸ்மதுல்லா ஷஹிடி, மொஹமட் நபி ஜோடி 47 பந்துகளில் 80 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். நபி ஆட்டமிழந்த பின்னர் வேகம் குறைந்தது. அவரை மஹீஸ் தீக்ஷண ஆட்டமிழக்க செய்தார்.

தோற்றாலும் பரவாயில்லை, ஆப்கானிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகாமல் தடுக்க வேண்டும் என்ற நிலை இலங்கை அணிக்கு உருவானது. நபி ஆட்டமிழந்ததனை தொடர்ந்து களமிறங்கிய கரீம் ஜனட் அதிரடியாக அடித்தாடி இலக்கை இலகுவாக்கினார். வெல்லாளகே அவரை ஆட்டமிழக்க செய்தார். அதே ஓவரில் அணியின் தலைவரையும் ஆட்டமிழக்க செய்ய இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு உருவானது.

7 விக்கெட்களை இழந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் போராட்டம் தொடர்ந்தது. ரஷீட் கான் இறுதி நேரத்தில் போராடினர். வெல்லாளகேயின் ஒரு ஓவரில் 12 ஓட்டங்களை பெற 1 பந்தில் 3 ஓட்டங்களை பெற்றால் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாம் சுற்று சுற்றுக்கு தகுதி பெறுமென்ற என்ற நிலையில் தனஞ்சய டி சில்வா பந்துவீசி விக்கெட்டினை கைப்பற்ற அடுத்த மூன்று பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் தனஞ்சய இறுதி விக்கெட்டை கைப்பற்ற இலங்கை அணி 02 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

கஸூன் ரஜித நான்கு விக்கெட்களை கைப்பற்றினார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. இருப்பினும் அது முறியடிக்கப்பட இருவருமே அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டிமுத், பத்தும் 63 ஓட்டங்களை பகிர்ந்தனர். அதன் பின்னர் சரித் அசலங்க, குஷல் மென்டிஸ் ஜோடி 102 ஓட்டங்களை பகிர்ந்து இலங்கை அணிக்கு பலத்தை வழங்கினர். சரித் ஆட்டமிழக்க மீண்டும் மத்திய வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குஷல் மென்டிஸ் சதம் அடிக்கும் வாய்ப்பே துரதிஷ்ட ரன் அவுட் மூலம் இழந்தார். இன்று அவர் 3000 ஓட்டங்களை கடந்தார்.
அண்மைக்கால குஷல் மென்டிஸ் ஓட்டங்களை பெற தடுமாறியதனை வைத்து பாலர் விமர்சனமும் கேலியும் செய்திருந்தனர். அனைத்தும் பதிலடி வழங்கியுள்ளார். LPL போட்டிகளிலேயே அவர் ஓட்டங்களை பெற தடுமாறினார். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாக ஓட்டங்களை பெற்று வருகின்றனர்.

இலங்கை அணியின் தலைவர் தஸூன் சாணக்கவின் துடுப்பாட்டைமே சிக்கலான நிலையில் காணப்படுகிறது. அவர் நல்ல முறையில் துடுப்பாட வேண்டும். போர்ம் ஆக வேண்டும். மத்திய வரிசை தடுமாறிய நிலையில் ஜோடி சேர்ந்த டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷன ஜோடி 64 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை பலமான நிலைக்கு அழைத்து சென்றனர். இலங்கை அணி 50 ஓவர்களில் 08 விக்கெட்டை இழந்து 291 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தஸூன் சாணக்கவின் பந்துவீச்சு மாற்றங்கள் சரியான முறையில் அமையாதது இலங்கை அணி மீது இந்த அழுத்தம் ஏற்பட காரணமாகியது. டுனித் வெல்லாளகே மற்றும் தனஞ்ஜய டி சில்வா ஆகியோரது பந்துவீச்சுகள் சரியாக பாவிக்கப்படவில்லை. இறுதியில் அவரது விக்கெட்கள் வெற்றிக்கு கைகொடுத்தன. இறுதியில் பாவித்ததை முதலே பாவித்திருந்தால் போட்டி இலங்கை அணியின் பக்கமாக மாறியிருக்கலாம்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கபிடி – நஜிபுல்லா சட்ரன்குல்படின் நைப்414060
டிமுத் கருணாரட்னபிடி – மொஹமட் நபிகுல்படின் நைப்323560
குசல் மென்டிஸ்Run Out 928463
சதீர சமரவிக்ரமபிடி – ரஹ்மனுல்லா குர்பாஸ்குல்படின் நைப்030800
சரித் அசலங்கபிடி – ரஷீத் கான்ரஷீத் கான்364321
தனஞ்சய டி சில்வாBoweldமுஜீப் உர் ரஹ்மான்141910
தஸூன்  ஷானகBoweldரஷீத் கான்050810
டுனித் வெல்லாளகே  333931
மஹீஸ் தீக்ஷணBoweldகுல்படின் நைப்282421
       
       
உதிரிகள்  07   
ஓவர்  50விக்கெட்  08மொத்தம்291   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
பசல்ஹக் பரூகி07015200
முஜீப் உர் ரஹ்மான்10006001
குல்படின் நைப்10005403
மொஹமட் நபி10003500
ரஷீத் கான்10006302
கரீம் ஜனட்03002000
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரஹ்மனுல்லா குர்பாஸ்பிடி – குஷல் மென்டிஸ்கஸூன் ரஜித040810
இப்ராஹிம் சட்ரன்Bowledகஸூன் ரஜித071410
குல்படின் நைப்L.B.Wமதீஷ பத்திரன221640
ரஹ்மத் ஷாபிடி – மதீஷ பத்திரனகஸூன் ரஜித454051
ஹஷ்மதுல்லா ஷஹீதிபிடி – கஸூன் ரஜிதடுனித் வெல்லாளகே596631
மொஹமட் நபிபிடி – தனஞ்சய டி சில்வாமஹீஸ் தீக்ஷண653265
கரீம் ஜனட்பிடி – டிமுத் கருணாரட்னடுனித் வெல்லாளகே221312
நஜிபுல்லா சட்ரன்பிடி – டுஸான் ஹேமந்தகஸூன் ரஜித231512
ரஷீத் கான்  271641
முஜீப் உர் ரஹ்மான்பிடி – சதீர சமரவிக்ரமதனஞ்சய டி சில்வா000300
பசல்ஹக் பரூகிL.B.Wதனஞ்சய டி சில்வா000300
உதிரிகள்  15   
ஓவர்  37.4விக்கெட்  10மொத்தம்289   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
கஸூன் ரஜித10007904
மஹீஸ் தீக்ஷண10006201
டுனித் வெல்லாளகே04003602
மதீஷ பத்திரன10006301
தஸூன் சாணக்க02003200
தனஞ்சய டி சில்வா1.4001202
     

அணி விபரம்

1 டிமுத் கருணாரட்ன, 2 பத்தும் நிஸ்ஸங்க, 3 குஷல் மென்டிஸ், 4 தனஞ்சய டி சில்வா, 5 சதீர சமரவிக்ரம, 6 தஸூன் சாணக்க, 7 டுனித் வெல்லாளகே, 8 மஹீஸ் தீக்ஷண, 9 மதீஷ பத்திரனே, 10 கஸூன் ரஜித, 11 சரித் அசலங்க

1 ரஹ்மனுல்லா குர்பாஸ் (வி.கா), 2 இப்ராஹிம் சட்ரன், 3 ரஹ்மத் ஷா, 4 ஹஷ்மதுல்லா ஷஹீதி (தலைவர்), 5 நஜிபுல்லா சட்ரன், 6 மொஹமட் நபி, 7 கரீம் ஜனட், 8 குல்படின் நைப், 9 ரஷீத் கான், 10 முஜீப் உர் ரஹ்மான், 11 பசல்ஹக் பரூகி

Social Share

Leave a Reply