சனல் 04 இற்க்கு எனது குடும்பத்துடன் பிரச்சினை கணாப்படுகிறது. ராஜபக்ஷ என்ற பெயர் அவர்களுக்கு பிரச்சினையாகவுள்ளது. எனது குடும்பம், எனது அப்பா என அவதூரான செய்திகளை வெளியிடுகின்றனர் என நேற்று(06.09) பாரளுமன்றத்தில் உரையாற்றிய போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்ததும் எமக்கு எதிராக ஆவணப்படத்தை வெளியிட்டனர். சனல் 04 ஐ ஒரு ஊடகமாகமாகவே நான் கருதவில்லை. நான் இதனை தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமாகவே பார்க்கிறேன். அவர்கள் தற்போது ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் ஒரு படத்தை தயாரித்துள்ளனர் என நாமல் தெரிவித்துள்ளார்.
சனல் 04 யுத்தத்தை நாம் முடித்தமைக்காக எமக்கு எதிராக இதனை வெளியிட்டுள்ளது. வேறு சிலரின் அரசியல் இலாபத்துக்காக அவர்கள் செயற்படுகிறார்கள் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஏற்கனவே அவர்கள் தயாரித்த ஆவண வீடியோ ஒன்றை தமது இணையத்திலிருந்து நீக்கியுள்ளனர். ஏன் அவ்வாறு நீக்க வேண்டும்? ஆதரமற்ற அடிப்படையற்ற வீடியோ எனப்தனாலேயே அது நீக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாரளுமன்றத்தில் சுட்டிக் காட்டினார்.