யாழில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது கைது மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற்று குற்றவாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், ”காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் மன வேதனையை தருகிறது எனவும், நான் நீதிபதியாக செயற்பட்டவன் என்ற ரீதியில் விசாரணை முடிவுறாமல் இவர்கள் தான் குற்றவாளி எனக் கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் தாதியர்களின் தவறே சிறுமியின் கை துண்டிக்க பிரதான காரணம் என செய்திகள் வெளியாகிய நிலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் சிறுமி தனது கல்விக் காலம், திருமண வாழ்க்கை என்பன பாதிக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் மற்ற இழப்பீட்டை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.