கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு!

நாடு முழுவதும் பல பிரதேசங்களில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கீரி சம்பா அரிசி இருப்பு வைத்துள்ள சில தொழிலதிபர்கள், கட்டுப்பாட்டு விலையை மீறி 300 முதல் 325 ரூபாய் வரையில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

அத்துடன் அரிசி ஆலை உரிமையாளர்கள்   அதிகபட்ச சில்லறை விலைக்கு ஒத்த விலையில் அரிசியை விற்பனை செய்து வருவதால், அதிக லாபம் கிடைப்பதில்லை என  அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

Social Share

Leave a Reply