காற்பந்தாட்ட தேர்தலில் தக்ஷித அணி வெல்வது உறுதி?

இம்மாதம் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள காற்பந்தாட்ட சம்மேளன தேர்தலில் தக்ஷித சுமதிபால தலைமையிலான அணி வெற்றி பெறுவது உறுதி என இன்று(07.09) நடைபெற்ற “காற்ப்பந்தின் மகிமைக்கான பாதை” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடக சந்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக்ஷித சுமதிபால தலைமையில் காற்பந்தாட்ட சம்மேளன தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன்று ஊடகவியலாளர்களை கொழும்பில் சந்தித்த வேளையில் இந்த அறிவிப்பை விடுத்தனர். தமக்கு 36 லீக்குகளின் ஆதரவு கிடைத்திருப்பதாகவும், தேர்தலுக்கு முன்னதாக இன்னும் சில லீக்குகளும் தமக்கு ஆதரவு வழங்கும் எனவும் மேலும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“மூன்று அண்ணன்களது காலத்தில்தான் 127 ஆம் இடத்திலிருந்த காற்பந்தாட்ட அணி தற்போது பின்னோக்கி செல்ல முடியாத 207 ஆம் ஆண்டுக்கு பின் தள்ளப்பட்டுள்ளது” என தக்ஷித சுமதிபால தெரிவித்தார். கொழும்பில் பலத்தை வைத்துக்கொண்டு காற்பந்தை வளர்க்க முடியாது. கிராம மட்டத்துக்கு அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். அதாவது லீக்குகளுக்கு அதிகாரம் பகிர்ந்து வழங்கப்படவேண்டும். 30 ஆம் திகதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தாம் பல மாற்றங்களை செய்து காற்பந்தை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்து செல்வோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தக்ஷித தலைமையிலான குழு தேர்தலுக்காக சமர்ப்பித்த வேட்பு மனுக்களில் ஒருவர் தவிர மற்றைய சகலரும் நிராகரிக்கப்பட்டனர். தமது நிராகரிப்பு பிழையானது எனவும், ஒரு பக்கச் சார்பானது எனவும் தக்ஷித தெரிவித்துளளார். தாம் லீக்குகளில் பதவி வகித்த காலம் குறைவே என்ற காரணத்தினாலேயே தேர்தல் மனு நிராகரிக்கப்பட்து எனவும், ஆனால் லீக்கில் பதவி வகிப்பது என்பது காற்பந்தாட்ட சம்மேளனத்தின் கீழ் லீக். லீக்கின் கீழ் கழகம். ஆகவே கழகத்தில் அங்கத்தவர் என்பது லீக்கின் அங்கத்தவர். ஆகவே அங்கத்தவர்கள் போட்டியிட முடியும் என்பதே யாப்பு. அது மீறப்பபட்டுள்ளதாக தக்ஷித கூறினார். இதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் என கேட்ட நிலையில் ஒரு வாரத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனவுவம் அது தொடர்பில் அறியத்தருவோம் எனவும் மேலும் கூறினார்.

தாம் தேர்தலில் போட்டியிடுவது உறுதியெனவும், வென்று காற்பந்து நிர்வாகக்த்தை ஊழல், மோசடிக்காரர்களிடமிருந்து காப்பற்றுவதே தமது குறிக்கோள் எனவும் உறுதியாக தக்ஷித தெரிவித்தார்.

தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட இந்த குழுவினை முன்மொழிந்தவர் ரஞ்சித் ரொட்ரிகோ எனவும் அதனை ஜஸ்வர் வழி மொழிந்தார் எனவும் தாமும் அதற்கு ஆதரவு வழங்கியதாவும் தக்ஷித தெரிவித்தார். ஆனால் அந்தக் குழு கடந்த முறை ஜஸ்வரை நிராகரித்தது. இம்முறை ஏற்றுக் கொண்டுள்ளது எனவும் மேலும் கூறிய அவர் காற்பந்தாட்ட அதிகாரிகள் கூறிய விடயங்களை வைத்துக் கொன்டு இந்த தேர்தல் குழு இவ்வாறான முடிவை எடுத்திருக்கலாம் எனவும் தெரிவித்தார். ஆகவே அவற்றை சீர் செய்து தாம் தேர்தலில் களமிறங்குவோம் என நம்பிக்கை வெளியிடடார்.

வேட்பு மனு தாக்கல் செய்து வெளிவரும் முன்னரே ஜஸ்வர் மற்றும் ரஞ்சித் ரொட்ரிகோ ஆகியோர் தமது பட்டியலை வைத்து அதில் யார் யார் நிராகரிக்கப்படுகின்றனர் என கூறியது தொடர்பிலான வீடியோவை வெளியிட்டு அந்த வீடியோ ஆசிய காற்பந்து சம்மேளனத்துக்கும், சர்வதேச காற்பந்து சம்மேளனத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக தக்ஷித சுமதிபால தெரிவித்தார். இதன் மூலமாக அவர்கள் திட்டமிட்டு செயற்படுவது உறுதியாக வெளிப்படுவதாகவும் மேலும் தெரிவித்தார்.

தமது அணியில் போட்டியிடும் 13 பேரும் காற்பந்து வீரர்கள் எனவும், காற்பந்தை வளர்ப்பதற்காகவே இந்த தேர்தலில் போட்டியிடுவதாகம், ஒருவேளை இந்த தேர்தலில் தோல்வியடைந்தால் தான் காற்பந்திலிருந்து விலகிவிடுவேன் என உப தலைவருக்காக போட்டியிடும் வென்னப்புவ லீக் தலைவர் ரோஹித்த தெரிவித்தார். ஊழல் நிறைந்த அந்தக் குழு மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் காற்பந்தையும், லீகையும் வளர்க்க முடியாது. எல்லாவற்றையும் மூடி விட்டு வீட்டில் இருப்பதே சிறந்தது எனவும் தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினர்.

மகளிர் காற்பந்தாட்ட அணி கடந்த வருடங்களில் பின்னடைவை அடைந்துளளதை சுட்டிக்காட்டிய இலங்கை அணியின் முன்னாள் வீராங்கனை ஹர்ஷினி ஆரியர்த்தன, மகளிர் அணியின் வீழ்ச்சி மிகவும் வருத்தமளிப்பதாகவும், இந்த குழு பதவியேற்றால் அது மாற்றப்படும் என்ற நம்பிக்கையில் தான் இந்த குழுவோடு இணைந்து போட்டியிடுவதாகவும் நிறைவேற்றுக் குழுவிற்காக போட்டியிடும் தெனியாய லீக் உறுப்பினர் ஹர்ஷினி ஆரியரத்தன தெரிவித்தார்.

“அந்த பெரிய அண்ணன்கள் மூவரும் செய்த ஊழல்களை அவர்களோடு இருந்து பார்த்தவன் நான். கணக்கியல் விடயங்களுக்காக வங்கியாளர் தேவை என்ற நிலையில் நான் அவர்களது குழுவில் இணைக்கப்பட்டிருந்தேன். அவர்களோடு தொடர்ந்தும் இவ்வாறு ஊழல்களுக்கு மத்தியில் பயணிக்க முடியாது என விலகியிருந்தேன். ஆனால் இந்த குழு நல்ல விடயங்களை செய்ய முனைகிறது. எனவனேதான் நான் இணைத்துள்ளேன்” என முன்னாள் மக்கள் வங்கி அணியின் காற்பந்து வீரரும், வங்கியாளருமான சுதாகர் கருத்து வெளியிட்டார். சுதாகர் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

“அவர்கள் தாம் வெற்றி பெறுவது உறுதி எனவும் தமக்கு 54 லீக்குகள் ஆதரவு எனவும் கூறி வருகின்றனர். அவ்வாறு இருந்தால் இருந்தபடியே வெல்லலாமே? எதற்காக பிரச்சினைகளை எழுப்ப வேண்டும். எம்மை பார்த்து ஏன் பயபப்ட்ட வேண்டும்? அதில் உண்மையில்லை. அவர்களுக்கு ஆதரவு இல்லை. அதன் காரணமாகவே இவ்வாறு செய்கிறார்கள்” என குறித்த ஊடக சந்திப்பில் கருத்து கூறிய முன்னாள் இலங்கை அணியின் வீரரும், தெஹிவளை/கல்கிஸ்ஸை லீக் தலைவருமான பீரிஸ் தெரிவித்தார். இவர் உபதலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் தமக்கு எதிராகவுள்ள ஆதாரங்களை மூவர் அடங்கிய அந்தக் குழு செய்யுமெனவும் அதற்கு அந்த குழுவுக்கு காற்பந்து லீக்குகள் உதவக்கூடாது எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்ததோடு ஊழல் நிறைந்தவர்கள் தொடர்பில் மக்களும் அறிந்து கொள்ள வேண்டுமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply