கொரோனா தோற்று இலங்கையின் பல இடங்களிலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக சுகாதாரா றையினர் தெரிவிக்கின்றனர்.
நேற்று மாலை இடம்பெற்ற சுகாதர துறையினரின் தேசிய ரீதியிலான கலந்துரையாடலில் இந்த விடயம் முக்கிய விடயமாக பேசப்பட்டதாக சுகாதர துறையினர் மூலம் அறிய முடிகிறது.
ஏற்கனவே திரிப்படைந்த கொரோனா வைரஸ் ஏ 30 தொடர்பில் சுகாதர துறையினர் அறிவித்தல்களை வழங்கி வருகின்றனர். அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கோரியுள்ளனர்.
தொடர்ந்தும் மக்களின் அசமந்த போக்கு இந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் நிலையினை உருவாக்கியுள்ளது. தமிழர் பிரதேசங்களில் தீபாவளி கொண்டாட்டங்களில் எந்தவித கட்டுப்பாடுமின்றி மக்கள் செயற்படுவதனை அவதானிக்க முடிந்தது.
சமூக இடைவெளிகளை பேணாமை, முககவசத்தை சரியாக அணியாமை போன்ற விடயங்களை மக்கள் மிக மோசமாக செய்து வருகின்றனர்.
நிலைமை இவ்வாறே சென்றால் நாடு மீண்டும் மூடபப்டும் நிலைக்கு செல்லும் என சுகாதர தரப்பினர் பேச ஆரம்பித்துள்ளனர். ஆகவே மக்கள் செயற்பாடுகள் கட்டுப்பாடாக அமையவேண்டும் எனபதே அனைவரதும் வேண்டுகோள்.