வடக்கு மாலியில் நைஜர் ஆற்றில் இராணுவ தளம் மற்றும் பயணிகள் படகு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 64 பேர் உயிரிழந்ததாக மாலி அரசு தெரிவித்துள்ளது.
நைஜர் ஆற்றில் உள்ள டிம்புக்டு படகு மற்றும் காவ் பிராந்தியத்தின் பாம்பாவில் உள்ள இராணுவ நிலை ஆகியவற்றை குறிவைத்து நேற்று (07.09) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 49 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 15 இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலிற்கு அல்கொய்தாவுடன் இணைந்த அமைப்பு ஒன்று உரிமை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.