இந்தியாவில் 6 மாநிலங்களில் தேர்தல் – பா.ஜ.க தோல்வி!

இந்தியாவில் 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5 திகதி இடைத்தேர்தல் இடம்பெற்றது, இதன் முடிவுகள் இன்று (08.09) அறிவிக்கப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பகேஷ்வர், உத்தர பிரதேசத்தில் உள்ள கோசி, கேரளாவில் உள்ள புதுபள்ளி, மேற்கு வங்காளத்தில் உள்ள துப்குரி, ஜார்க்கண்டில் உள்ள தும்ரி, திரிபுராவில் உள்ள போக்சாநகர், தன்புர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இந்த 7 தொகுதிகளில் “இந்தியா கூட்டணி” பெரும்பாலான தொகுதிகளில் வெற்றியை குவித்துள்ளது.

கேரள மாநிலம் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டியின் மகனுமான சாண்டி உம்மன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சாண்டி உம்மன் (காங்கிரஸ்) – 80,144 வாக்குகளும், ஜெய்க் சி தாமஸ் (சிபிஐஎம்) 42,425 வாக்குகளும், லிஜின் லால் (பாஜக) – 6,558 வாக்குகளும் பெற்றது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோசி தொகுதியில் சமாஜ்வாடி முன்னிலையில் உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள துப்குரி தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜார்க்கண்டில் ஆளும் ஜே.எம்.எம் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி) வேட்பாளர் பேபி தேவி 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) வேட்பாளர் யசோதா தேவியை தோற்கடித்து வெற்றி பெற்ற்றுள்ளார்.

திரிபுராவில் போக்சாநகர், தன்புர் ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க. வென்றுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற பகேஷ்வர் தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. விரைவில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல், 2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணிக்கு இது மிகப் பெரும் சோதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, இடைத்தேர்தல் நடைபெற்ற ஏழு தொகுதிகளில் 4 தொகுதிகளில் “இந்தியா” கூட்டணி வெற்றிப்பெற்றுள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply