இந்திய-பாகிஸ்தான் போட்டிக்கு மேலதிக நாள்; ஏனைய பயிற்றுவிப்பாளர்கள் அதிருப்தி

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிக்கு மாத்திரம் மேலதிக நாள் ஒதுக்கப்பட்டமைக்கு தமது அதிருப்தியை இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் க்றிஸ் சில்வவூட் மற்றும் பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க ஆகியோர் தமது அதிருப்தியினை வெளியிட்டுள்ளனர்.

இன்று(08.09) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளனர். போட்டி தொடர் ஆரம்பித்த பின்னர் போட்டியின் விதிமுறை மாற்றபப்டுவது இதுவே முதற் தடவையென பங்காளதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளார் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். தாம் போட்டி ஏற்பாட்டாளர்கள் இல்லை எனவும் அவர் மேலும் கூறினார். இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட முன்னர் தம்மிடம் ஆலோசனை கேட்டிருந்தால் தாம் ஏதாவது கூறியிருக்கலாம். ஆனால் அவர்கள் மாற்றத்தை செய்துவிட்டு அறிவித்துள்ளனர். இனி இது பற்றி பேசி பலனில்லை எனவும் மேலும் அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் க்றிஸ் சில்வர்வூட் தெரிவித்தார். நாம் ஏற்பாட்டாளர்கள் இல்லை. அதனால் கூறுவதின் படி நாம் விளையாடிட்டு போவதே எமது கடமை என அவர் கூறியுள்ளார். ஆனால் இது அணிக்கு பாதிப்பு என கூறியுள்ளார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நிறுத்தப்படுவது தொடர்பில் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்டது. இருப்பினும் ரசிகர்கள் அதனை ரசித்தமையினாலும், அதிக வருமானம் வந்தமையினாலும் அந்த தொடரை முன்னெடுக்க சர்வதேக் கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியது. அத்தோடு 50 ஓவர்கள் நடாத்த முடிவும் எடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த வருட ஆசிய கிண்ண தொடர் இரண்டு நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை, ஆப்கானிஸ்தான்-இலங்கை போட்டியில் ஓட்ட நிகர சராசரி சர்ச்சை, மழை சிக்கல், டிக்கெட் விலை என சர்ச்சைக்குரிய தொடராக இந்த வருட தொடர் மாறியுள்ளது.

Social Share

Leave a Reply