தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கிய ரயில் ஊழியர்கள்!

கொழும்பில் ரயில் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை இன்று (11.09) முன்னெடுத்துள்ளனர்.

இதன்காரணமாக கொழும்பில் இருந்த பயணிக்க வேண்டிய ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளைய (12.09) தினம் லோகோமோட்டிவ் இன்ஜினியர்ஸ் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாவும், இது குறித்து தொழிற்சங்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைமுறையை திருத்தியமைத்து, ஏறக்குறைய 5 வருடங்களாக தாமதமாகி வரும் பதவி உயர்வுகளை உடனடியாக வழங்குமாறு கோரியே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply