அத்தியாவசிய சேவையாக்கப்படும் புகையிரத சேவை?

புகையிரத சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (12.09) நடைபெற்ற நிலையில், இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “தொழிற்சங்க பயங்கரவாதம்’ காரணமாக சிக்கலில் விழுந்து அதிலிருந்து மீள முடியாத நிலை காணப்படுவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால், உயிர் வாழ முடியாது என்றும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply