விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வெளிநாட்டு விமானிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்புகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர் நட்டல் வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு விமானிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அரசாங்கத்தின் ஒப்புதலை விமான நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.