சுற்றுலாத்துறை வளர்ச்சி பாதையில்…

செப்டெம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 46,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக தரவுகள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் 01ம் திகதி முதல் 12ம் திகதி வரை, நாட்டுக்கு மொத்தமாக 46,308 பயணிகள் வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்டெம்பர் மாதத்திற்கு குறைந்தபட்சம் 120,201 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன, ஜெர்மனி, ஐரோப்பா, ரஷ்யா, இந்திய என பல நாடுகளிலிருந்தும் அதிகளவிலான பயணிகள் இலங்கைக்கு தொடர்ந்து வருகை தருவது, சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு மிகவும் சாதகமான ஒன்றாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply