நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் குறித்த பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேசம் மற்றும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பிரதேசத்திற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, மற்றும் அஹெலியகொட ஆகிய பகுதிகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.