ஆசிய கிண்ண தொடரின் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டிக்கு சமானன குழுநிலைப் போட்டியில் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
மழை காரணமாக 3 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய போட்டி 5.10 இற்கே ஆரம்பித்தது. அதன் காரணமாக 45 ஓவர்கள் போட்டியா ஆரம்பித்தது. மீண்டும் மழை பெய்து 8.10 இற்கு ஆரம்பிக்கும் போது 42 ஓவர்கள் போட்டியாக குறைக்கப்பட்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி 42 ஓவர்களில் 252 ஓட்டங்களை பெற வேண்டுமென்ற இலக்கு டக் வேர்த் லூயிஸ் முறைப்படி நிரணயிக்கப்பட்டது. இலங்கை அணி 42 ஓவர்களில் 08 விக்கெட் இழப்பிற்கு 252 ஓட்டங்களை பெற்று 02 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
இந்த இலக்கை பெறுவது கடினம் என்ற நிலையில் ஆரம்பித்த இலங்கை அணிக்கு குஷல் பெரேரா நல்ல ஆரம்பத்தை வழங்க அவர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தமை பின்னடைவை வழங்கியது. இருப்பினும் இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக குஷல் மென்டிஸ், பத்தும் நிஸ்ஸங்க அரைச்சத இணைப்பாட்டத்தை கடந்த அணியை மீள கட்டியெழுப்பி நம்பிக்கை வழங்க பத்தும் ஆட்டமிழந்தார்.
சதீர சமரவிக்ரம, குஷல் மென்டிஸ் ஜோடி நம்பிக்கை தரும் விதமாக துடுப்பாடி இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்பினர். இருவரும் நல்ல முறையில் நுட்பமாக துடுப்பாடி சத இணைப்பாட்டத்தை கட்டி எழுப்பினர். இதன் மூலம் இலங்கை அணியின் வெற்றி உறுதியானது. குஷல் மென்டிஸ் தனது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். சதம் பெறக்கூடிய வாய்ப்பு இருந்தும் அதனை தவறவிட்டார். சதீர சமரவிக்ரம அரைச்சதத்தை பூர்த்தி செய்ய முன்னர் முன் சென்று துடுப்பாட முயன்று ஸ்டம்ப் மூலம் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியிலும் இதே போன்று ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து சரித் அஸலங்கவுடன் ஜோடி சேர்ந்து தலைவர் தஸூன் சாணக்க இன்றும் சொதப்பினார். 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரின் போரமின்மை தொடர் கதையாகவே இருக்கிறது. 10 ஓட்டங்கள் வெற்றி பெற தேவையென்ற நிலையில் ஷகின் ஷா அப்ரிடி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்களை கைப்பற்றி இலங்கை அணி மீது அழுத்தத்தை வழங்கினார். சரித் அசலங்க நம்பிக்கை தரும் விதமாக துடுப்பாடி போட்டியை நிறைவு செய்து வைத்தார். அவரின் துடுப்பாட்டமே இறுதியில் உச்ச அழுத்தத்தை வழங்கிய போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றியை வழங்கி இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது.
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் நுட்பமாக துடுப்பாடியமையும், ஓட்டங்களை ஓடி பெற்றமையும் இலகுவாக ஓட்ட எண்ணிக்கை உயர காரணமாக அமைந்தது. தஸூன் சாணக்கவின் பந்துவீச்சு மாற்றங்கள் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதுவும் இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக சுட்டிக் காட்டலாம்.
பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப விக்கெட்டை இன்றைய போட்டிக்காக இலங்கை அணியில் இணைக்கப்பட்ட ப்ரமோட் மதுஷானினால் கைப்பற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஆஷாட் ஷபீக், பாபர் அஸாம் ஜோடி 64 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற போது டுனித் வெல்லாளகேயினால் பாபர் அஷாமின் விக்கெட் கைப்பற்றப்பட்டது. நிலைத்து நின்று துடுப்பாடி அரைச் சததமடித்த அப்துல்லா ஷபிக் மதீஷ பத்திரனவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த விக்கெட்டையும் மதீஷ பத்திரன கைப்பற்றினார். ஐந்தாவது விக்கெட் 130 ஓட்டங்களை பெற்ற நிலையில் வீழ்த்தப்பட்டது.
விக்கெட்கள் வீழ்ந்தாலும் நான்காமிலக்கத்தில் களமிறங்கிய மொஹமட் ரிஷ்வான் வேகமாக ஓட்டங்களை குவிக்க பாகிஸ்தான் அணியின் எண்ணிக்கை உயர்ந்து சென்றது. 42 ஓவர்களாக ஓவர்கள் குறைக்கப்பட்டதும் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வேகம் அதிகரித்தது. மொஹமட் ரிஷ்வான்-இப்திகார் அஹமட் ஜோடி அரைச்சத இணைப்பாட்டத்தை வேகமாக பூர்த்தி செய்தனர். மொஹமட் ரிஷ்வானும் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் அணி பலமான நிலைக்கு சென்றது. மொஹமட் ரிஷ்வான்-இப்திகார் அஹமட் ஜோடி 108 ஓட்டங்களை ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். சத இணைப்பாட்டத்தை 75 பந்துகளில் பூர்த்தி செய்திருந்தனர். மதீஷ பத்திரன அந்த இணைப்பாட்டத்தை முறியடித்தார்.
இந்த இலக்கு இலங்கை அணிக்கு இலகுவானதல்ல. வெற்றி பெற கடுமையாக போராடவேண்டும் என்ற எதிர்பார்ப்பே காணப்பட்டது. இருப்பினும் இலங்கை அணியின் துடுப்பாட்டம் அந்த எதிர்பார்ப்பை உடைத்தெறிந்தது.
இலங்கை, இந்தியா அணிகள்ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் 2010 ஆம் ஆண்டு தம்புள்ளையில் மோதியதன் பின்னர் இறுதிப் போட்டியில் சந்திப்பது இதுவே முதற் தடவையாகும். இதுவரையில் எட்டு தடவைகள் இரு அணிகளும் இறுதிப் போட்டியில் சந்தித்துள்ளன. இவற்றுள் ஐந்து தடவைகள் இந்தியா அணியும், மூன்று தடவைகள் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளன. இலங்கை அணி 13 ஆவது தடவையாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பத்தும் நிஸ்ஸங்க | பிடி- ஷதாப் கான் | ஷதாப் கான் | 29 | 44 | 4 | 0 |
| குஷல் பெரேரா | Run Out | 17 | 08 | 4 | 0 | |
| குசல் மென்டிஸ் | பிடி- மொஹமட் ஹரிஸ் | இப்திகார் அகமட் | 91 | 87 | 8 | 1 |
| சதீர சமரவிக்ரம | St. முகமட் ரிஸ்வான் | இப்திகார் அகமட் | 48 | 51 | 4 | 0 |
| சரித் அசலங்க | 49 | 47 | 3 | 1 | ||
| தஸூன் ஷானக | பிடி- முஹமட் நவாஸ் | இப்திகார் அகமட் | 02 | 04 | 0 | 0 |
| தனஞ்சய டி சில்வா | பிடி- ஷமான் கான் | ஷகீன் ஷா அப்ரிடி | 09 | 13 | 1 | 0 |
| டுனித் வெல்லாளகே | பிடி- முகமட் ரிஸ்வான் | ஷகீன் ஷா அப்ரிடி | 01 | 00 | 0 | 0 |
| ப்ரமோட் மதுஷான் | Run Out | 01 | 02 | 0 | 0 | |
| மஹீஸ் தீக்ஷண | ||||||
| மதீஷ பத்திரன | ||||||
| உதிரிகள் | 10 | |||||
| ஓவர் 42 | விக்கெட் 08 | மொத்தம் | 252 | |||
| வெற்றியிலக்கு(D/L) | 252 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஷகீன் ஷா அப்ரிடி | 09 | 00 | 51 | 02 |
| ஷமான் கான் | 5. | 01 | 32 | 00 |
| மொஹமட் வசீம் | 03 | 00 | 25 | 00 |
| முஹமட் நவாஸ் | 07 | 00 | 26 | 00 |
| ஷதாப் கான் | 09 | 00 | 55 | 01 |
| இப்திகார் அகமட் | 08 | 00 | 50 | 03 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| அப்துல்லா ஷபிக் | பிடி – ப்ரமோட் மதுஷான் | மதீஷ பத்திரன | 52 | 69 | 3 | 2 |
| ஃபகார் ஷமான் | Bowled | ப்ரமோட் மதுஷான் | 04 | 11 | 0 | 0 |
| பாபர் அசாம் | St. குஷல் மென்டிஸ் | டுனித் வெல்லாளகே | 29 | 35 | 3 | 0 |
| முகமட் ரிஸ்வான் | 86 | 73 | 6 | 2 | ||
| மொஹமட் ஹரிஸ் | பிடி -மதீஷ பத்திரன | மதீஷ பத்திரன | 03 | 09 | 0 | 0 |
| முஹமட் நவாஸ் | Bowled | மஹீஸ் தீக்ஷண | 12 | 12 | 2 | 0 |
| இப்திகார் அகமட் | பிடி – தஸூன் சாணக்க | மதீஷ பத்திரன | 47 | 40 | 4 | 2 |
| ஷதாப் கான் | பிடி -குஷல் மென்டிஸ் | ப்ரமோட் மதுஷான் | 03 | 03 | 0 | 0 |
| ஷகீன் ஷா அப்ரிடி | 01 | 01 | 0 | 0 | ||
| உதிரிகள் | 15 | |||||
| ஓவர் 42 | விக்கெட் 07 | மொத்தம் | 252 | |||
| வெற்றியிலக்கு |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ப்ரமோட் மதுஷான் | 07 | 01 | 58 | 01 |
| மஹீஸ் தீக்ஷண | 09 | 00 | 42 | 01 |
| தஸூன் சாணக்க | 03 | 00 | 18 | 00 |
| டுனித் வெல்லாளகே | 09 | 00 | 40 | 01 |
| மதீஷ பத்திரன | 08 | 00 | 65 | 03 |
| தனஞ்சய டி சில்வா | 06 | 00 | 28 | 00 |
அணி விபரம்
இலங்கை
குஷல் பெரேரா, டிமுத் கருணாரட்ன, பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, தஸூன் சாணக்க, டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, மதீஷ பத்திரனே, ப்ரமோட் மதுஷான் சரித் அசலங்க
பாகிஸ்தான்
பாபர் அசாம் (தலைவர்), பக்கார் ஷமான், அப்துல்லா ஷபிக், மொஹமட் ஹரிஸ், முகமட் ரிஸ்வான், இப்திகார் அகமட், ஷதாப் கான், முஹமட் நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, மொஹமட் வசீம் ஜூனியர், ஷமான் கான்