இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் காரைதீவுக்கும் கோவிலான் தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட  03 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ​​வடக்கு கடற்படை கட்டளை அதிகாரி குழுவொன்று மீன்பிடி படகுகளை அவதானித்து அவர்களை கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படைத் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Social Share

Leave a Reply