சச்சித்ர தொடர்ந்தும் விளக்கமறியலில்…

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (15.09) உத்தரவிட்டுள்ளது.

2020ம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக்கில் ஆட்ட நிர்ணயம் செய்தமை தொடர்பில் சச்சித்ர சேனாநாயக்க விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குறித்த வழக்கு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளார்.

Social Share

Leave a Reply