லிபியாவில் புயலில் சிக்கி பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பலி!

லிபியாவில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக உயிழந்தோரின் எண்ணிக்கை 11,300ஐ கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இந்த அனர்த்தத்தில் சிக்கி பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டேனியல் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக லிபியாவில் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது.

மேலும் கடந்த சில நாட்களாக கிழக்கு லிபியாவில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் வரலாறு காணாத வெள்ளநிலை ஏற்பட்டுள்ளது. இதில் டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.

மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன், நிவாரண பொருட்களை வழனாகும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Social Share

Leave a Reply