நாட்டில் கதிரியக்க பரிசோதனை சேவை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அரசாங்கத்தின் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய வைத்தியசாலையின் கதிரியக்க பரிசோதனை சேவைகள் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார சேவையாளர்களின் பற்றாக்குறையினால் இலங்கையில் உள்ள பல முக்கிய வைத்தியசாலைகளின் சேவைகள் எதிர்காலத்தில் நெருக்கடிக்கு உள்ளாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.