அவுஸ்திரேலியா தொடருக்கான இந்தியா அணி ஆசிய கிண்ணம் நிறைவடைந்து மறு நாள்(18.09) அறிவிக்கப்பட்து. முதலிரு போட்டிகளுக்கான அணியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவு செய்யபப்ட்டுள்ளமை கவனிக்கப்படவேண்டியதாக அமைந்துள்ளது. அக்ஷர் பட்டேல் ஆசிய கிண்ண தொடரில் உபாதையடைந்தமையின் காரணாமாக வொசிங்டன் சுந்தர் ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அஸ்வின் உலகக்கிண்ண தொடருக்கு தெரிவு செய்யப்படாமை தொடர்பில் இந்தியாவில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளமை உலகக்கிண்ண தொடருக்கு தெரிவு செய்வதற்கான ஒரு முயற்சியாக இருக்குமென நம்பப்படுகிறது.
அவுஸ்திரேலியா தொடரில் அஷ்வின் சிறப்பாக பந்துவீசினால் அணியில் சேர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதேவேளை அவருக்கு போட்டியாக வொஷிங்டன் சுந்தரும் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் சிறப்பாக செயற்பட்டால் அஷ்வின் இன்றி வொஷிங்டன் சுந்தர் தெரிவு செய்யபப்டும் வாய்ப்புகளுமுள்ளன.
அணி விபரம்
முதல் இரு போட்டிகள்
லோகேஷ் ராகுல் (தலைவர்), ரவீந்திர ஜடேஜா (உப தலைவர்), சுப்மன் கில், ருத்ராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷர்டூல் தாகூர், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி, திலக் வர்மா, பிரக்சித் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஷ்வின், வொஷிங்டன் சுந்தர்
மூன்றாவது போட்டி
ரோஹித் சர்மா (தலைவர்), ஹார்டிக் பாண்ட்யா (உப தலைவர்), சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்டூல் தாகூர், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி, விராட் கோலி, குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் (உடற்தகுதி அடைந்தால் அணியில் இடம்), ரவிச்சந்திரன் அஷ்வின், வொஷிங்டன் சுந்தர்
இந்தியா உலகக்கிண்ண அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உபாதையடைந்த வீரர்களை அணியில் மாற்றம் செய்ய முடியும். அதன் அடிப்படையில் அக்ஷர் பட்டேலை மாற்றம் செய்யும் வாய்ப்புகளே இந்தியா அணிக்கு கிடைத்துள்ளது.