உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- குழுக்களின் பரிந்துரைகளை அமுற்படுத்துங்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மூன்று அறிக்கைகள் உள்ளதாகவும், அந்த மூன்று அறிக்கைகளின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20.09) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் மலல்கொட அறிக்கை போன்ற 3 அறிக்கைகளின் பரிந்துரைகள் அமுற்படுத்தப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை ஆரம்பிக்க முடியும் என்றும்,எனவே இதனைக் கருத்திற்கொண்டு குறித்த பரிந்துரைகளை அமுற்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

Social Share

Leave a Reply