உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகள் மீதான விவாதத்தின்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று (21.09) பாராளுமன்றத்தில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தவர்களில் அப்போதைய ஜனாதிபதி சிறிசேன முக்கியமான ஒருவர் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“பொன்சேகா ராணுவ தளபதியாக இருந்த காலத்தில் 1,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இறந்தனர்” என்று சிறிசேனா பதிலளித்துள்ளார்.
காரசாரமாக தொடர்ந்த கருத்தாடலுக்கு ஆட்சேபனை தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தினன கமகே, தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட சண்டைக்கு விவாதங்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தை பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.