இலங்கையில் பணவீக்கம் மேலும் குறைந்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 2.1% ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஜூலை மாதத்தில் 4.6 சதவீதமாக பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பணவீக்கம் -5.4% ஆகக் காணப்படுகிறது. ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை -2.5% ஆக பதிவாகியுள்ளது.