நாகபட்டினத்திற்கும் – காங்கேசன்துறைக்கும் இடையிலான படகு சேவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு கடல்சார் சபை மற்றும் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஆகியவை இந்த படகுச் சேவையை ஆரம்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் துறைமுக கால்வாய் தூர்வாரப்பட்டு பயணிகள் முனையம் அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் படகு சேவை முன்னெடுக்கபடவுள்ளதாக கூறப்படுகிறது.