பாராளுமன்ற குழுவிலிருந்து அலி சப்ரி ரஹீம் நீக்கம்

பாராளுன்ற குழுவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நீக்கப்படுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை இன்று(22.09) பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எதிர்ப்புகளின்றி இந்த பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாராளுன்ற உறுப்பினர் அலி சபரி ரஹீம் இந்த வருடம் மே மாதம் வெளிநாட்டிலிருந்து பெருமளவான தங்கம் மாறும் கைபேசிகளை நாட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் சுங்கப்பிரிவினரில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவற்றுக்குரிய வரி மற்றும் தண்டப்பணத்தை செலுத்தியதன் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் அவரை பாராளுமன்ற குழுவிலிருந்து நீக்குமாறு பிரேரணையை முன்வைத்திருந்தார்.

Social Share

Leave a Reply