பிள்ளையான் என அழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அவரது குழுவினருக்கு புலனாய்வு துறையினால் மாதாந்தம் வழங்கப்பட்ட 35 இலட்சம் ரூபா கொடுப்பனவு இன்னமும் வழங்கப்படுகிறதா என பாராளுமன்றத்தில் நேற்று(22.09) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடாபில் பதிலளிக்குமாறு பிள்ளையனிடம் அவர் கோரியுள்ளார்.
பிள்ளையானின் குழு புலனாய்வு துறையினால் பராமரிக்கப்பட்டு அவர்களுக்கான கொடுப்பனவுகள் குற்றப்புலனாய்வு திணைக்கள கணக்கிலிருந்து பணம் வழங்கப்பட்டுள்ளதாக சனல் 04 ஆவண காணெளி தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று(23.09) நடைபெற்ற விவாதத்தின் போது இந்த விடயத்தை அனுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.
ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் நியாயமான விசாரணைகள் நடைபெறுமென நாம் எதிர்பார்க்க முடியாது. குற்றம் செய்ததாக கூறப்படும் பிள்ளையான் போன்றவர்கள் மற்றும் தாக்குதலை நடாத்த தவறியவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்களான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரம்சிங்க, கோட்டாபய ராஜபக்ஷ, புலனாய்வு துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் அரசாங்கத்துடன் இருப்பதனால் எவ்வாறு நியாயமான விசாரணை நடைபெறுமென எதிர்பார்க்க முடியுமென அனுர கேள்வியெழுப்பியுள்ளார்.