நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (10/11) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலாளர் இதனை அறிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்தில் வசிக்கும் 4,000 குடும்பங்களில் 12,000 க்கும் அதிகமான மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளையும் நாளைய தினம் (10/11) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் மவாட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மன்னார், தலைமன்னார், சாந்திபுரம், சங்கானை, உடுவில் மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
