நாடளாவிய ரீதியில் 220,000 பாவனையாளர்களுக்கு இன்றைய தினம் (09/11) மின்தடை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் 9 மணியளவில் மின்தடை காரணமாக அதுதொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கபெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இவ்வாறு மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை சரிசெய்வதற்கு மின்சார சபையினால் முடிந்தளவில் அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
