பங்களாதேஷ் வழங்கிய கடனை முழுவதுமாக செலுத்திய இலங்கை!

பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகை முழுவதையும்  இலங்கை மீள செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடந்த வியாழக்கிழமை (21.09) 50 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடன் தொகையின் கடைசி தவணையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களும், வட்டியாக 4.5 மில்லியன் டொலர்களும்  பங்களாதேஷுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி இலங்கை செப்டம்பர் 02, 2023 அன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையும்,, ஆகஸ்ட் 17, 2023 அன்று 50 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் முன்னதாக திருப்பிச் செலுத்தியிருந்தது.

Social Share

Leave a Reply