மலேசியாவின் கோலாலம்பூரில் மூன்று இலங்கையர்களை கொலை செய்த குற்றச்சாட்டில், இருவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, சந்தேகத்திற்குரிய இரண்டு சந்தேக நபர்களும் இலங்கையர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரின் மத்திய பகுதியான சென்டூலில் கடந்த வெள்ளிக்கிழமை(22.09) மூன்று இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது இருவர் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி