நாடு முழுவதும் உள்ள அனைத்து மசாஜ் மையங்களையும் (SPA) ஒழுங்குபடுத்துவதற்கும் அவற்றை நடத்துவதற்கும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுறுத்தளுக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாடு முழுவதிலும் உள்ள மசாஜ் மையங்களை ஒழுங்குபடுத்துதல், வருடாந்த வரி அறவீடு, பதிவுக் கட்டணங்கள் போன்ற விடயங்கள் தொடர்பில், கலந்தாலோசித்து புதிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.