தனது நிர்வாண காணொளிகளை விற்ற இளம் தாய்!

தனது நிர்வாண வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பெண் ஒருவரை செப்டம்பர் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு குழந்தையின் தாயான குறித்த பெண், ஆபாச பிரசுர கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2 மற்றும் குற்றவியல் சட்டத்தின் 286 வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தனது நிர்வாண காணொளிகளை இணையத்தில் தனது வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய நபர்களுடன் பகிர்ந்து கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது, நிமிடத்திற்கு ரூ.1,000 ருபாய் என்ற அடிப்படையில் பணம் பெற்றுகொன்றுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை அடுத்த விசாரணை தினத்தில் தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார். குறித்த பெண் சார்பாக வாதிட எந்த சட்டத்தரணியும் முன்வரவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply