ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவை ஆலோசித்து வருவதால், தொழில்நுட்பத் துறை, சிவில் சமூகம் மற்றும் பல்வேறு நிபுணர்களின் பங்களிப்பை சேர்ப்பது முக்கியமானது தெரிவித்துள்ளார்.
மேலும், “கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது அவசியம், ஏனெனில் இது ஒரு அடிப்படை உரிமையாகும், அது கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டியதொன்று,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தரம் மற்றும் ஏனைய ஜனநாயக நாடுகளின் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை திருத்தியமைக்க இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுமாறும் தூதுவர் சுங் வலியுறுத்தியுள்ளார்.