தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அறிவிப்பு!

இந்த வருடத்தில் இதுவரையில் 105 குழந்தைகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

தொழுநோய்க்கு உள்ளான அதிகமான சிறுவர்கள் 14 வயதுக்குட்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அறை இலக்கம் 12 இல் தொழுநோய் சிகிச்சை நிலையம்நடத்தப்படுவதாகவும், அங்கு நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் தொழுநோயாளிகள் வந்து சிகிச்சை பெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தொழுநோய் கட்டுப்பாடு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply