“வெற்றிக்கான மென் திறன்கள்” – சுய ஊக்குவிப்புப் பயிற்சிகள்

“வெற்றிக்கான மென் திறன்கள்” – சுய ஊக்குவிப்புப் பயிற்சிகள் அண்மையில் அம்பாறை திருக்கோவில் விநாயகபுரம் மகா வித்தியாலயத்தில் வி மீடியா ஊடக பங்களிப்புடன் KTP Consultancy & Training நிறுவனத்தின் பணிப்பாளர் துரைராஜா பிரஷாந்தனால் நடாத்தப்பட்டது.

அம்பாறை மாவட்டம் விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பிற்கான KTP Consultancy & Training நிறுவனத்தின் முதன்முதல் பயிற்சி KTP நிறுவனத்தின் 565வது மற்றும் 566வது தொழின்முறைப் பயிற்சிகளாக அதன் நிறுவுனரும் பெருநிறுவனப் பயிற்றுவிப்பாளருமான துரைராஜா பிரஷாந்தன் அம்பாறை திருக்கோவில் விநாயகபுரம் மகா வித்தியாலயத்தில் 26/9/2023 இல் மிகச்சிறப்பாக வழங்கினார்.

“வெற்றிக்கான மென் திறன்கள்” (Soft Skills for Success – S3) எனும் தலைப்பில் தரம் 10 & 11 மற்றும் தரம் 12 & 13 மாணவர்களுக்கு இரு அணிகளாகப் பங்குபற்றல் அணுகுமுறையில் (Participatory Approach) சுய ஊக்குவிப்புப் பயிற்சிகள் நடத்தப்பட்டன.

தொடக்க, நிறைவு உரைகளை ஆற்றி சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கிய கல்லூரியின் அதிபர் அவர்களுக்கும் நிகழ்ச்சி & தொடர்பாடல் ஒருங்கிணைப்பு மற்றும் ஆவணப்படுத்தல்களுக்கு உதவிய RJ சசிகுமார், சோலை FM குழுவினருக்கு பிரசாந்த் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இவ்விரு இலவசப் பயிற்சிகளும் KTP Consultancy & Trainning நிறுவனத்தின் தனிநபர் சமூகப் பொறுப்புணர்வு (PSR – Personal Social Responsiblity) நடவடிக்கைகளாக வழங்க ஊடக அனுசரணைகளை வழங்கிய சோலை FM மற்றும் V-Media ஆகியோருக்கு மிக்க நன்றிகள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“எமது திருக்கோணமலைக்குத்தான் என்றில்லாமல் எங்கு தேவையோ, யார் மதித்துக் கேட்கிறாங்களோ அங்கு கொடுங்கோ” என்று முழுமையான நிதி அனுசரணையை முகநூல் பதிவுகளைப் பார்த்தவுடன் தானாக முன்வந்து வழங்கிய விபுலானந் குழந்தைவடிவேல் அவர்களுக்குச் சிறப்பு நன்றிகளைப் பதிவுசெய்வதுடன் அவர் போன்று மற்றோரும் முன்வரவேண்டும் என பணிவன்புடன் வேண்டுகின்றோம் என பிரசாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

சாட்டுக்களைச் சொல்லி வளவாய்ப்புக்களைத் தட்டிக்கழிக்காது தொலைநோக்குப் புத்தாக்கத் தலைமைத்துவத்துடன் செயற்பட்ட அவர்கள் அனைவரினதும் உயர் பண்பு பாராட்டுக்குரியது.

பல பாடசாலைகள் எமது பயிற்சிகளை வேண்டுகின்றன. இருப்பினும் அவர்களிடம் அனுசரணை இல்லாமல் உள்ளது. இந்த பயிற்சிகளை பாடசாலை மாணவர்க்ளுக்கு வழங்க விரும்புபவர்கள் +94715650258 எனும் இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ள முடியும்.

"வெற்றிக்கான மென் திறன்கள்" - சுய ஊக்குவிப்புப் பயிற்சிகள்
"வெற்றிக்கான மென் திறன்கள்" - சுய ஊக்குவிப்புப் பயிற்சிகள்

Social Share

Leave a Reply