நீதிபதி சரவணராஜா பதவி விலகல்-குற்றப்புலனாய்வு விசாரணைக்கு உத்தரவு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தனது பதவியிலிருந்து விலகி, வெளிநாட்டுக்கு சென்றுள்ளமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் ரிரான் அலஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க தனது செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய போதும் அதனை ஜனாதிபதி ஊடக பிரிவி அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என வி மீடியாவுக்கு தெரிவித்துள்ளது.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பாக வழங்கிய தீர்ப்புகளுக்காக தான் அச்சுறுத்தப்படுவதாகவும், உயிர் ஆபத்துக்குள் உள்ளதாகவும் கடந்த 23 ஆம் திகதி கடிதம் மூலமாக தெரிவித்து பதவி விலகியதுடன் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பல்வேறுபட்டவர்கள் தமது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் அரசாங்கம் தமது சார்பாக முதற் கட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.

Social Share

Leave a Reply