இலங்கைக்கு கிடைத்த பதக்கம் பறிபோனது

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு கிடைத்த வெள்ளிப்பதக்கம் பறிபோனது. 400 மீட்டர் கலப்பு அஞ்சல் ஓட்டப்போயில் இலங்கை இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது. இருப்பினும் ஓடுபாதையை மாறி ஓடியமையினால் தகுதியிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

400 மீட்டர் ஓட்டப்போட்டிகளில் ஆண் பெண் பிரிவுகளில் இலங்கை வீர வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற போதும் பதக்கங்களை வெல்ல முடியவில்லை. இவ்வாறான நிலையில் கிடைத்த வெற்றியும் கை நழுவிப்போயுள்ளது.

இதுவரையில் நடைபெற்றுள்ள போட்டிகளின் படி கிரிக்கெட்டில் மாத்திரம் இலங்கைக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் மாத்திரமே இலங்கைக்கு நம்பிக்கையுள்ள விளையாட்டாக காணப்படுகிறது.

சீனவின் ஆதிக்கம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்கிறது. அவர்களின் முதலிடம் பறிபோக வாய்ப்புக்களே இல்லை.

இந்தியா நான்காமிடத்தில் தொடர்கிறது.

Social Share

Leave a Reply