அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்-மைத்திரிபால சந்திப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது, மருந்துகள் தட்டுப்பாடு, தற்போதைய சுகாதார சிக்கல்கள் தொடர்பில் இரு தரப்பும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.

இந்த சிக்கல்களை தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு விளக்கமளிக்கப்பட்டன. இந்த சந்திப்பில் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டார்.

Social Share

Leave a Reply